புதன், 20 ஏப்ரல், 2011

அப்பத்தாவின் வசவும், அகத்திக்கீரையும்




தெருவோரப் பிச்சைக்காரனை
உதாசீனப்படுத்தி
பழக்கப்பட்ட மனசு
மாதக்கடைசியில்
அடுத்தவனிடம்
கையேந்தும் போது
குறுகுறுக்கவில்லை.



சாலையோரத்தில்
மூளைசிதறி
செத்துக்கிடந்தவனைப் பார்த்தபின்
புரூட் மிக்சரை
வெறுத்துப் போனவன்களில்
நானும் ஒருவன்.



பிடாரன்
மகுடி ஊத ஊத
படமெடுத்து
ஆடுகிறது அவனது வறுமை.




ழைக்காலம் வந்தால் பருத்திப்பால்
கோடை வந்தால் தர்ப்பூசணி
பனிக்காலம் வந்தால் சுக்குமல்லி காபி
பிழைப்பை
பச்சோந்தியாய்
மாற்றி விடுகிறது வாழ்க்கை.




ழட்டி விடப்பட்ட செருப்புகள்
அதற்குச் சொந்தமான
கால்களுக்குப் பதில்
வேறு கால்களை
நுழைத்துப் பார்க்கிறது
இரண்டாவது முறையாக
கோவில் வாசலில்.



தினெட்டடி
கருப்பணசாமி சிலை முன்
பயமின்றி
தலையாட்ட மறுத்த ஆடு
அப்பத்தாவின்
வசவுகளை
அசைபோட்டு
மென்று கொண்டிருக்கிறது வீட்டில்.

















கருத்துகள் இல்லை: