திங்கள், 8 ஆகஸ்ட், 2011
ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் : தமுஎகச கடும் கண்டனம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதற்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் அருணன், பொதுச்செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்டிதழில், இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கதையை வெளியிட்டதற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.
அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.
சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

5 கருத்துகள்:
வருத்தமான செய்தி :(
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
தலைவர் குறித்து கொச்சையாக எழுத இவனுக்கு எப்படி தைரியம் வந்தது.பின்னே இப்படி பேசாமல் மசுரயா புடுங்கறது.சிங்கள் நாய்களின் காலை நக்கி பிழைக்கும் இந்த நாய்களிடன் என்ன நாகரீக வார்த்தை? உங்க புர்ச்சி எல்லாம் மம்தாவால் கிழிக்கப்பட்டு கிழிங்ச டவுசரோடு திரியும் மேற்க்கு வங்காளத்தில் செய்யவும்.
jananaayakathin 4 vadu thoon pathirikkai ena vaai kizhiya pesukiraarkal aatchiyaalarkal . oru paththirikkaiyaalan karuthai veliettaal kolai seivoem ena miratduvadu kaatdumiraanti thanam . kozhaikalin kaatdu kathdhal sinkathin kuralvalaiyai ontrum seiya mudiyadu . theetchanyaavin padai varisai theriyatha veenarkal . paavam .
jananaayakathin 4 vadu thoon pathirikkai ena vaai kizhiya pesukiraarkal aatchiyaalarkal . oru paththirikkaiyaalan karuthai veliettaal kolai seivoem ena miratduvadu kaatdumiraanti thanam . kozhaikalin kaatdu kathdhal sinkathin kuralvalaiyai ontrum seiya mudiyadu . theetchanyaavin padai varisai theriyatha veenarkal . paavam .
மார்க்சிஸ்டுகள் என கூறிக்கொண்டு மார்க்சை இழிவு படுத்தியும் கம்னியூசத்திற்க்கு எதிராகவும் செயல் படும் போலிகள் ஜனநாயகம் குறித்து பேசுவது வெட்கக் கேடு.டாடா போன்ற பெருமுதலாளிகளுக்கு மே.வங்கத்தில் காவடி தூக்கிகொண்டு அவன் போடும் பிச்சை காசுக்கு பஜனை பாடிக்கொண்டு பழங்குடி இனமக்களை நர வேட்டை ஆடிய ரத்த வெறி பிடித்தவர்கள்தான் இந்த கம்னியூஸ்டுகள். அந்த மக்களுக்காக குரல் கொடுத்த மாவோயிஸ்டுகளை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்தவர்கள் ஜனநாயகம் குறித்து பேசுவது குறித்து எதில் சிரிப்பது.அதனால்தான் மக்களிடம் அன்னியபட்டு அம்மணமாய் நிற்க்கிறார்கள்.ஆனாலும் அது குறித்து வெட்கமே இல்லாத மண்ணாங்கட்டிகள். இதை அப்படியே ஈழத்தில் பிரதிபலிக்கிறார்கள். ரத்தவெறி பிடித்த சிங்களனுடன் பேச சொல்கிறார்கள்.மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள்.அவர்களுக்கு தீர்வு சொல்ல இவன்கள் யார் புடுங்கிகள்.அம்மாவையும்,சகோதரியையும், மகன் அப்பாமுன் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்பவனிடம் இப்படித்தான் கம்னியூஸ்டுகள் ஆற அமர உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்துவான்களோ?இது அவர்களுக்கு சகஜமோ? த்தூ!மானங்கெட்ட கம்னியூஸ்டுகள்!
கருத்துரையிடுக