வெள்ளி, 15 ஜூலை, 2011
வார்த்தைகளைப் பொம்மையாக்கி . . .
வீட்டிலிருந்து
பள்ளிக்குக் கிளம்பிய அவளிடம்
சில வார்த்தைகளைக்
கொடுத்து விட்டேன்.
பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்தும்
சக தோழிகளிடமிருந்தும்
அவளுக்குச் சில வார்த்தைகள் கிடைத்தன.
கேட்டதும்
படித்ததுமாக கிடைத்த
சில வார்த்தைகள்
அவளுக்குப் பல வார்த்தைகளானது.
வேலை முடிந்து
இரவு வீடு திரும்பி
படுக்கையில் சாயும் போது
நான் கொடுத்த சில வார்த்தைகளை
பொம்மையாக்கித் தந்து விட்டு
உறங்கி விடுகிறாள்.
மார்பின் மீது அமர்ந்து
உறங்கவிடாது வேடிக்கைப் பார்க்கும்
அப்பொம்மையை
இறக்கி விட்டு துயில
நெடுநேரமாகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
அருமையான கவிதை
''மார்பின் மீது அமர்ந்து
உறங்கவிடாது வேடிக்கைப் பார்க்கும்
அப்பொம்மையை
இறக்கி விட்டு துயில
நெடுநேரமாகிறது''
அனுபவித்தது
கருத்துரையிடுக