திங்கள், 13 டிசம்பர், 2010

ஒருமைப்பல்கலைக்கழகம்: பின்வாங்கிய தமிழக அரசு




தமிழகத்தில் கோவை,மதுரையில் இரண்டு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களை தனியார் பல்கலைக்கழகமாக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஏற்கனவே, இப்பிரச்சனை குறித்து முடிவு எடுக்க இருந்த கூட்டம், மழை என்ற பெயரால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மூட்டா, டான்சாக் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போராட்டம் துவங்கியது. மக்கள் சொத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே என்ற முழக்கத்துடன் களத்தில் அவர் இறங்கினார்கள். இந்த நிலையில் அப்படிப்பட்ட நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கவில்லை என தமிழக அரசு திடீர் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து திங்களன்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 2 கல்லூரிகளில் தனியார் சுயநிதி ஒருமை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறி மாணவர்களும், ஆசிரியர் கூட்டமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது கல்லூரிகளை ஒருமை பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படாமல் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டதை கருணாநிதி நினைவு கூறியுள்ளார்.
பேரவையின் தேர்வு குழுவும் வரும் 14ஆம் தேதி கூடி ஆலோசனை மேற்கொள்ள இருந்த நிலையில் மழையின் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பாதகமான முடிவுகள் எடுக்கப்படக் கூடும் என்று அஞ்சி அதற்கு முன்னதாக ஆசிரியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.

அப்படியென்றால் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக்க ஏற்கனவே கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது எதற்காக? இப்போது இப்பிரச்சனை தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? அதை சொல்லாமல் ஆசிரியர் சங்கங்கள் தூண்டிவிடுவதாகச் சொல்லி பிரச்சனையை முதல்வர் திசைதிருப்பலாமா?







 

 


கருத்துகள் இல்லை: