ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
இவரா. . . எம்.ஜி.ஆர் !
மதுரை காந்திமியூசியத்தில் ஞாயிறன்று காலை நண்பர் அர்ஷியாவின் நாவல் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது பள்ளி மாணவர்கள் சிலர், காந்திமியூசியத்திற்கு வரும் வெளிநாட்டுப்பயணிகள் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் தேசிய வலிமை இதழின் ஆசிரியரும், சிந்தனையாளருமான வே.சுவாமிநாதன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து சென்ற பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒரு படத்தைக் கொடுத்து இவர் யார் எனத் தெரிகிறதா எனக்கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குழந்தை நேரு என்றது. இன்னொரு சிறுவன் எம்.ஜி.ஆர் என்றான்.சில பள்ளிக்குழந்தைகளை உதடுகளை சுழித்துத் தெரியவில்லை என்பதை பதிலாக சொல்லாமல் நெளிந்து கொண்டிருந்தன. அவர் கையில் வைத்திருந்த படத்தில் இருந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். இந்திய விடுதலைக்காக பிரிட்டிசாரின் பிடரிமயிர் பிடித்து உலுக்கிய சிங்கம். அவரைப் பள்ளிக்குழந்தைகள் தெரியாமல் உள்ளனர் என்பது அவர்கள் செய்ய தவறா? அவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களின் தவறா எனத் தெரியவில்லை. நடிகர் விஜய் தெரியுமா என ஒரு குழந்தையிடம் கேட்டதற்கு, “வேட்டைக்காரன்“ படத்தில் விஜய் வாயசைத்த பாடலைப்பாடி, அவர் குறித்த மேலும் பல தகவல்களை குழந்தைகள் அள்ளிவிட்டது ஆச்சரியமாக இருந்தது. விஜய்க்கு நேதாஜியைத் தெரிந்திருக்குமா என எனக்குக் கேட்கத் தோன்றியது.
கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் நேதாஜியை அனைவரிடமும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு படங்களை பள்ளிக்குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பள்ளிகளுக்கும் வழங்கி வரும் தேசிய வலிமை ஆசிரியர் வே.சுவாமி நாதனுக்கு சல்யூட் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக