உனக்காக உயிரையும் விடத்தயார் என காதலிப்பவர்கள் அதிகமாக ஆண்கள், தங்கள் காதலியிடம் கூறுவார்கள். உயிரை விட எந்த காதலியும் சொல்லப்போவதில்லை. காதலிப்பது என்பது இருமனம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்.
காதலித்தவர்கள் ஏமாற்றினால், ஒருதலையால் ஏமாந்தால் உயிரை விடுவதும் காதல் சார்ந்த விஷயமாக அதாவது காதலுக்காக உயிரையும் விடும் தியாகமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வறுமை, வேலையின்மை ஆகியவற்றால் இறப்பவர்களை விட காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம் என தேசிய குற்றப்பிரிவு ஆவணங்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 10 பேர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் மட்டும் 3774. காதல் தோல் தற்கொலைகள் மேற்குவங்கத்தில் நடைபெற்றுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணம் தெரிவிக்கிறது. அங்கு ஓர் ஆண்டில் 792 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 549 பேரும், அசாமில் 396 பேரும், ஒரிசாவில் 212 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டு மொத்த தற்கொலைகளில் 11.5 சதவீத சம்பவங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.
விலைவாசி உயர்வால் அத்திவாசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பட்டினியாலும், வறுமையாலும் ஒரு ஆண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3006 பேர். ஆனால், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை என்பது 3774.
தங்களின் குடும்பம் குறித்தோ, சமூகம் குறித்தோ அக்கறையில்லாமல் காதல் என்ற ஒன்றுக்காக செத்துப்போனவர்களை நினைத்து பரிதாபப்படமுடியாது. கோபம் தான் படமுடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக