சனி, 20 பிப்ரவரி, 2010

அம்மா, அய்யா. . .யாராவது வீட்டில இருந்தா வந்துடுங்க

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் பிப்-21 ந்தேதி நடைபெற்றுள்ளது. இதில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


சென்னையில் திரைத்துறையினர் பாராட்டு, திருக்குறள் அமைப்பு பாராட்டு, சான்றோர் அமைப்பு பாராட்டு என பல பாராட்டுவிழாக்கள், விருதுவழங்கும் விழாக்கள் என புகழுரைகளில் பூத்துக்கிடந்த நமது முதல்வருக்கு பாராட்டு என்றால் அவ்வளவு இஷ்டம் எனத் தெரிந்து தான் திமுகவின் தீர்மானத்தில் பல பாராட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் 6 தீர்மானங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியை பாராட்டி நிறைவேற்றப்பட்டுள்ளன. 7-வது தீர்மானம் என்ன தெரியுமா? துணை முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டி தீர்மானம். அடுத்து, தமிழகத்தின் தொன்மைவாய்ந்த கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையிலான சென்னை சங்க நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக கனிமொழிக்கு பாராட்டு, அடுத்ததாக செம்மொழி மாநாடு நடத்த ஏற்பாடு ( ! ) செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதுமனிதன் என்றொரு படம். நடிகர் சத்தியராஜ், தபேலா கற்றுக்கொள்வதற்காக பூர்ணம் விஸ்வநாதன் வீட்டுக்குள் கவுண்டமணியோடு நுழைந்து விடுவார். அப்போது பார்க்கும் அனைவரின் காதிலும் விழுந்து மரியாதை செய்வார். அப்போது கவுண்டமணி, "அம்மா, அய்யா. . .யாராவது வீட்டில இருந்தா வந்துடுங்க. அப்புறம் கபாலி மரியாதை செய்யலன்னு வருத்தப்படக் கூடாது" எனக்கூறுவார். அது போல வேற யாருக்காவது பாராட்டி தீர்மானம் போடலைன்னா சொல்லிடுங்கய்யா, அப்புறம் மரியாதை செய்யலன்னு வருத்தப்படக்கூடாது.

3 கருத்துகள்:

புகழன் சொன்னது…

very nice

புகழன் சொன்னது…

congratulation

புகழன் சொன்னது…

அழகிரியைப் பாராட்டி தீர்மானம் எதுவும் போடலயாமே?