ஆண்குறி அறுத்தவள்
அனாதையாய்
செத்துப்போனாள்.
கைகொட்டி
நடத்திய அவளது வாழ்க்கையை
கைகட்டி
வேடிக்கைப் பார்த்தவர்கள்
இப்போதும்
பார்க்கிறார்கள் கைகட்டி.
சீக்குவாங்கிச் செத்துப்போனாள்
பொட்டைக்குள்ள பிரச்சனை
போலீஸ் அடிச்சதால
செத்துப்போனாள் என
அவள் இறப்பிற்கான
காரணங்கள் கட்டப்படுகிறது
பாடை மூங்கிலாய்.
காதலித்தவனின்
பெயரை மார்பில்
பச்சையாய் குத்திய ரகசியத்தை
மண்ணுக்குள் போவதற்குள்
யாரிடமாவது சொல்லியிருக்கலாம்
எனக்கும் ஒரு காதலிருக்கிறதென்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக