கடவுளே- உடனே நீ வரணும்
கட்டாயம் தண்டனை தரணும்
அனாதைப் பிள்ளைனாலையா
இப்படி அடிக்கிறாராக ?
படிக்குற அவுக பிள்ளைக்கு
பொதிக்கழுதை நானு;
பிள்ளைக்கு சோறுட்ட
கைகாட்டி நிலாவும் நானு.
அரைவயிறு பட்டினியால
அடிவயிறு ஒட்டிப்போச்சு
இறுகமுடிஞ்ச பாவாடைநாடா
இத்துப்போயி அந்துபோச்சு
அம்மணநிலை வாரதுக்குள்ள
வீட்டுக்கார அம்மா சேலை ஒன்னு
பழனாசானத் தேவலை.
தண்டிக்க வரலைன்னாலும்
கண்டிக்கவாவது வரலாம்ல கடவுளே?
இவ்வளவு நாள் சொல்லியும்
இரங்கலேயே உன்மனசு. . . . .
எங்குறையை கேட்க
எந்த சாமிக்காவது காதிருக்கா?
(லங்காஸ்ரீ இணையத்தளத்தில் வந்த கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக