புதன், 13 ஜனவரி, 2010

மது ஊற்றப்பட்ட பாத்திரங்கள்


கடைத்திறக்கும் முன்

காத்திருப்பவர்களின்

அவஸ்தைகளைப் பொறுக்கமுடியாமல்

தள்ளாடுகிறது அத்தெரு.

இன்னமும் சில நிமிடங்களில்

நிகழக்கூடும்

போதையேறிவர்களின்

தடித்த சொற்களால்

மாதாகோவில் மணியின்

பேரோசைகளின் அதிர்வு

தனது மூச்சை நிறுத்திக்கொள்ள.

முப்பது ரூபாயைக் கையில் ஏந்தியவாறு

கூட்டுசேரக் காத்திருப்பவனின்

கண்களில் குடிகொண்டுள்ளது

போதையின் ருசி.

ஆனாலும்

மது ஊற்றப்பட்ட

பாத்திரங்கள் தள்ளாடுவதேயில்லை.

மது நாட்டுக்கும்

வீட்டுக்கும் கேடு.

சரி. . . அரசிற்கு?


(வெள்ளி, 11 டிசம்பர் 2009 கீற்று இணையத்தில் வெளிவந்த கவிதை)

கருத்துகள் இல்லை: