புதன், 13 ஜனவரி, 2010

குறும்பாக்கள்

*பிச்சைக்காரர்களைப் போலிருக்கிறார்கள்


பணக்காரர்கள்.


எப்போதும்


இல்லையென்றே கூறுகிறார்கள்.



* குண்டோதரன் கை வைத்த


வைகையில்


தற்போது கால் கூட


நனைக்க முடியவில்லை.




* முக்கண் இருந்தும்


விட்டுவிட்டானே


கருவறை சேட்டையை.




 *வீதிகளில்
  வன்முறை தாண்டவமாட
  வீடுகளில்
  மானும்,மயிலும் ஆட

கருத்துகள் இல்லை: