தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களில் மதிமயங்கி கிடந்த இசைவாணர்களின் செவிகளுக்கு கிராமத்து குலவை சத்தங்களும், தாலாட்டுச்சத்தங்களும் சங்கீதமாக விழுந்தது ராசைய்யாவின் பிரவேசத்தால் தான்.
தமிழ்நாட்டில் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா, அதுவரை தமிழகம் கேட்காத இசையை தந்தார். "மச்சானை பாத்தீங்களா " என்ற பாடலை கேட்காத கிராமமே இல்லை என்ற வகையில் அப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. " கண்ணன் ஒரு கைக்குழந்தை, சின்னக்கண்ணன் அழைக்கிறான்" என்ற கர்நாடக சங்கீதப்பாடல்களும், "பொன்மாலைபொழுது,கண்மணியே காதல் என்பது கற்பனையோ, ராமனின் மோகனம், என் இனிய பொன் நிலாவே, பருவமே புதிய பாடல் பாடு, ஏதோ மோகம்" ஆகிய பாடல்கள் இன்னமும் சங்கீத மேடைகளை ஆளுமை செய்யும் பாடல்கள் இளையராஜாவின் இசைக்கோலத்தில் இருந்து சிந்தியவையாகும். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் இதுவரை இசைஅமைத்த படங்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் மேலாகும். 1985- ஆம் ஆண்டு சகாரசங்கமம்(தெலுங்கு), 1987-ஆம் ஆண்டு சிந்து பைரவி(தமிழ்), 1989-ஆம் ஆண்டு ருத்ர வீணா(தெலுங்கு) ஆகிய படங்களுக்கு அவருக்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்தது. 1993-ஆம் ஆண்டு லண்டன் பில்ஹார்மோனிக் இசைக்குழு மூலம் இளையராஜா அமைத்த சிம்பொனி இசை உலகத்திற்கு அவரின் இசைஞானத்தின் வெளிச்சத்தை உணர்த்தியது. தன்ராஜ் மாஸ்டரிடம் கற்ற இசையை அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் அடிஎடுத்து வைத்த இளையராஜா, "விளையாடு ராஜா விளையாடு" என்று படத்திற்கு தற்போது இசை அமைக்க உள்ளார். பாவலர் வரதராஜனின் மகன் ஜோ வரதராஜன் இயக்கும் இப்படம் இளையராஜா இசையில் வெளிவரும் 875 படமாகும். பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்ற பழைய பாடல்களில் இளையராஜாவின் பாடல்களும் அடங்கியுள்ளதை இன்றைய இசை உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக