மதுரை மாவட்டத்தில் தீண்டாமை குறித்த கள ஆய்வை நடத்தி அரசின் கவனத்திற்கு கொணரவும், அதற்கான இயக்கங்களைத் திட்டமிடுவதெனவும் சனவரி 19-2007 அன்று கூடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கூட்டம் முடிவு செய்திருந்தது.
அதனடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் - வெகுசன அமைப்புகள் - தொண்டு நிறுவனங்கள் - தலித் இயக்கங்கள் உள்ளிட்ட 34 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கள ஆய்வாளர்களின் கூட்டம் பிப்ரவரி 8 - வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 125 பேர் பங்கேற்றனர். 107 பேர் களப் பணிக்கான இசைவினையும் அளித்தனர். அக்கூட்டத்தில் வழிகாட்டல் குறிப்புகளும் - கேள்வித்தாள் ஒன்றும் அளிக்கப்பட்டன.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மொத்த மையங்கள் - 47
பேரையூர் தாலுகா 05
மேலுhர் தாலுகா 07
வாடிப்பட்டி ஒன்றியம் 04
செல்லம்பட்டி ஒன்றியம் 04
உசிலம்பட்டி ஒன்றியம் 04
மதுரை கிழக்கு தாலுகா 05
மதுரை மேற்கு தாலுகா 04
மதுரை தெற்கு தாலுகா 03
அலங்காநல்லுhர் ஒன்றியம் 04
திருமங்கலம் தாலுகா 07
கள ஆய்வாளர் எண்ணிக்கையும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் - மொத்தம் 107
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 38
சோக்கோ டிரஸ்ட் 12
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 12
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் 8
இந்திய சனநாயக வாலிபர் சங்கம் 11
சனநாயக மாதர் சங்கம் 7
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் 1
சி.ஐ.டி.யு. 7
த.மு.எ.ச. 1
ஒருங்கிணைப்பாளர்கள் 10
பிப்ரவரி 9 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள 44 கிராமங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தலித் மக்கள் வாழும் பகுதிகளில் உரையாடல்கள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுவான விசாரிப்புகள் மூலம் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. எல்லா கிராமங்களிலுமே சாதியத்தின் தாக்கங்கள் படிந்திருப்பதை உணர முடிந்தாலும் குறிப்பான தீண்டாமை வடிவங்கள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுவதை நம்மால் உணர முடிந்தது.
இடதுசாரி அமைப்புகள், தலித் இயக்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் தலையீடுகளின் விளைவாக சாதிய ஒடுக்குமுறைகள் ஓரளவு குறைந்திருந்தாலும் முற்றிலுமாக அவை களையப்பட்டுவிடவில்லை. சட்டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் லாவகமாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பது உள்ளது. (உ-ம்) இரட்டை தம்ளர் முறைக்கு மாறாக மறுபயன்பாடற்ற தம்ளர்கள் பல கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில கிராமங்களில் எதிர்ப்புகளுக்கேற்ப ஒரடி பின்வாங்குவதும் - அந்நிலையிலேயே தீண்டாமையைத் தொடர முனைவதையும் காண முடிந்தது. பொருளாதார பின்புலம் பலவீனமாக இருப்பதால் அவமானங்களை அமைதியாகச் சுமந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிற நிலைமையில் தலித்துகள் உள்ள கிராமங்களும் உண்டு. இளமையும், படிப்பும் இணைந்த வாலிபர்களிடம் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆவேசமும், குமுறல்களும் இருப்பதும் வெளிப்பட்டது. சனநாயக உள்ளத்தோடு இப்பிரச்சினையை அணுகுகிற தலித் அல்லாதோரையும் சந்திக்க முடிந்தது.
பொதுவாக குளம், கிணறு, குடிநீர்க் குழாய்கள், தேநீர்க்கடைகள், சமுதாயக் கூடம், சிகை திருத்தம், சலவைக் கூடம், பேருந்து, பேருந்து நிறுத்தம், பள்ளிக்கூடம், பொதுத் தெருக்கள், கோவில் வழிபாடு, திருவிழாக்கள், பெண்களுக்கு மரியாதை, கௌரவம், ரேசன் கடை, அஞ்சல் நிலையம், அடிப்படை வசதிகள், கிராம சபைக் கூட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் தீண்டாமை பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் நிலவுவதை இக்கள ஆய்வு வெளிக் கொணர்ந்துள்ளது.
தலித் மக்கள் மிகுந்த அடித்தளத்து உழைப்பாளி மக்களாகவே உள்ளனர். விவசாயக் கூலி, சித்தாள், பழைய பேப்பர் வியாபாரம், கல்லுடைத்தல், சுமைப்பணி, சுகாதாரப்பணி, சாலைப் பணியாளர், செருப்பு தைத்தல், தோட்டி, கல்குவாரி, காய்கறி விற்பனை, செங்கல்சூளை, மில் ஆகிய வேலைகளில் உள்ளனர்.மதுரை மாவட்டத்தின் தலித் மக்கள் கல்வியிலும் பின்தங்கிய நிலை உள்ளனர். ஒரு கிராமங்களில் 150 குடும்பங்களில் ஒருவர் மட்டுமே கல்லுhரியை எட்டியுள்ளனர்.
தேநீர்க் கடைகளில் பாகுபாடு
----------------------------
பல கிராமங்களில் மறுபயன்பாடற்ற தம்ளர்கள் (ருளுநு ஹசூனு கூழசுடீறு) மூலமாக நவீன இரட்டை தம்ளர் முறை தொடர்கிறது. ஆனால் சில இடங்களில் இப்போதும் இரட்டை தம்ளர் முறை வெவ்வேறு வகைளில் நீடிக்கிறது.
உள்ளுர்க்காரர்களுக்கு பாகுபாடு காட்ட இயலாவிட்டாலும் வெளியூர் தலித்துகளுக்கு மட்டும் மறுபயன் பாடற்ற தம்ளர்கள் 1. எம் சுப்புலாபுரம் பேரையூர் தாலுகா
தலித்துகளுக்கு மறுபயன்பாடற்ற தம்ளர் -மற்றவர்களுக்கு சில்வர் / பீங்கான் / கண்ணாடி தம்ளர்கள்
1. சாத்தாங்குடி திருமங்கலம் தாலுகா
2. மேலஉரப்பனுhர் திருமங்கலம் தாலுகா
3. வேடர்புளியங்குளம் மதுரை தெற்கு தாலுகா
4. சென்னம்பட்டி பேரையூர் தாலுகா
தலித்துகளுக்கு மறுபயன்பாடற்ற தம்ளர் தருவதால் தேநீர் விலையிலேயே பாகுபாடு
(தலித்களுக்கு ரூ.2, மற்றவர்களுக்கு ரூ.1.50)
அல்லிக்குண்டம் உசிலம்பட்டி ஒன்றியம்
தலித்துகளுக்கு குறியிடப்பட்ட தனித்தம்ளர் (புள்ளி போட்ட தம்ளர்) அல்லது தனித் தம்ளர்
கோவிலாங்குளம் செல்லம்பட்டி ஒன்றியம்
விக்கிரமங்கலம் எரவார்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம்
கச்சகட்டி வாடிப்பட்டி ஒன்றியம்
மன்னாடி மங்கலம் வாடிப்பட்டி ஒன்றியம்
இன்னும் சிரட்டையை கூரையில் சொருகி வைப்பது
------------------------------------------------
1. முத்துலிங்காபுரம் பேரையூர் தாலுகா
2. மைட்டாம்பட்டி திருமங்கலம் தாலுகா
தலித்துகள் மட்டும் தம்ளரை அவர்களே கழுவி வைத்துச் செல்ல வேண்டுமென்ற கட்டுப்பாடு
1. தென்னை நல்லுhர் திருமங்கலம் தாலுகா
தேநீர்க்கடைகளில் சமமாக அமரத் தடை
1. தனியாமங்கலம் மேலுhர் தாலுகா
கிராமங்களில் மேற்கூறிய வடிவங்களில் தேநீர்க் கடைகளில் தீண்டாமை நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள்ளேயே பல்வேறு வடிவங்களில் இப்பாரபட்சம் அரங்கேறுவதைப் பார்க்கலாம்.
குளங்கள், கிணறுகள்
-----------------------
தலித்துகளும், இதர பிரிவினரும் வாழும் பகுதிகளில் தத்தம் பகுதிகளிலுள்ள குளம், கிணறுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இத்தகைய கிராமங்களில் தீண்டாமை இருந்தாலும் வெளிப்படுவதில்லை. ஆனால் சில கிராமங்களில் சாதிய பாரபட்சம் வெளிப்படையாய் உள்ளது.
தனித்தனி படித்துறை
-----------------------
1. சோலைப்பட்டி (பேரையூர் தாலுகா)
2. சென்னம்பட்டி (பேரையூர் தாலுகா)
தலித் மக்களுக்கு அனுமதியின்மை
--------------------------------
தென்னம நல்லுhரில் (திருமங்கலம் தாலுகா)பொதுக்கிணறு அனுமதி மறுப்பு
முத்துலிங்காபுரம் (பேரையூர் தாலுகா) தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டாலும் மேலப்பட்டி / ஓடைப்பட்டி (திருமங்கலம் தாலுகா) அவர்களே முகர்ந்து கொள்ளத்தடை
5 கிராமங்களில் குளம் / கிணறு பயன்பாட்டில் பாரபட்சம் வெளிப்படுகிறது.
சலவை, முடி திருத்தம் மறுக்கப்படுதல்:
வடிவேல்கரை (மதுரை தெற்கு)சலவை,முடிதிருத்தம் மறுப்பு. நாகமலைப் புதுக்கோட்டைக்கு வரவேண்டியுள்ளது.
வேடர்புளியங்குளம் (மதுரை தெற்கு) சலவை, முடிதிருத்தத்திற்கு அனுமதியில்லை. திருநகருக்கு வரவேண்டும்.
தென்னம நல்லுhர் (திருமங்கலம் தாலுகா)அனுமதி உண்டு. ஆனால் இரட்டை ஆட்கள் தனித் தனியாய் முடி திருத்தம் செய்கிறார்கள்.
மேல உரப்பனுhர் (திருமங்கலம் தாலுகா)அனுமதியில்லை.
செம்மினிப்பட்டி (வாடிப்பட்டி ஒன்றியம்)அனுமதி இல்லை.
மன்னாடி மங்கலம் (வாடிப்பட்டி ஒன்றியம்) அனுமதி இல்லை. சோழவந்தான் செல்ல வேண்டியுள்ளது.
முத்துலிங்கபுரம் (பேரையூர் தாலுகா) அனுமதி இல்லை. டி.கல்லுப்பட்டிக்கு செல்ல வேண்டும்.
கொட்டாம்பட்டி (மேலுhர் தாலுகா)மற்றவர்கள் வீடுகளுக்கு சென்று துணி வாங்குவது போல தலித் மக்கள் வீடுகளுக்கு செல்வதில்லை.
அட்டப்பட்டி (மேலுhர் தாலுகா)சலவை அனுமதியில்லை.மேலுhருக்கு போக வேண்டும்
மேலவளவு (மேலுhர் தாலுகா)அனுமதியில்லை.மேலுhருக்கு போக வேண்டும்.
தனியாமங்கலம் (மேலுhர் தாலுகா)மேல் சாதித் துணிகளோடு கலந்து விடக்கூடாது.
பதினெட்டாங்குடி (மேலுhர் தாலுகா) சலுhனில் இரட்டைச் சேர்கள். சலவை அனுமதியில்லை.
காமராஜ்நகர் (உசிலம்பட்டி தாலுகா)அனுமதியில்லை.உசிலம்பட்டி மெயின் பகுதிக்கு வரவேண்டும்.
அல்லிகுண்டம் (உசிலம்பட்டி தாலுகா)அனுமதியில்லை.உசிலம்பட்டி மெயின் பகுதிக்கு வரவேண்டும்.
கீழப்பட்டி (செல்லம்பட்டி தாலுகா)அனுமதியில்லை. உசிலம்பட்டி மெயின் பகுதிக்கு வரவேண்டும்.
கோயிலாங்குளம் (செல்லம்பட்டி தாலுகா)அனுமதியில்லை. கருமாத்துhர், செல்லம்பட்டி செல்ல வேண்டும்.
தலித்துகளை மரியதையின்றி ஒருமையில் விளிப்பது (தலித் பெரியவர்களைக்கூட)
மேல உரப்பனுhர் (திருமங்கலம்)
மேலக் கோட்டை (திருமங்கலம்)
வண்டியூர் (மதுரை கிழக்கு) - துப்புரவுத் தொழிலாளர்கள்
கேவலமாக நடத்தப்படுகிறார்கள்.
நரசிங்கம் (மதுரை கிழக்கு)
சென்னம்பட்டி (பேரையூர் தாலுகா)
அட்டப்பட்டி (மேலுhர் தாலுகா)
மேலவளவு (மேலுhர் தாலுகா)
பொதும்பு (மதுரை மேற்கு)
அல்லிகுண்டம் (உசிலம்பட்டி)
விக்கிரமங்கலம் (செல்லம்பட்டி ஒன்றியம்)
கீழப்பட்டி (செல்லம்பட்டி ஒன்றியம்)
தலித்துகளின் சுய கௌரவத்தைப் பாதிக்கிற வகையில் இது அமைந்துள்ளது. 11 கிராமங்களில் இக்குற்றச்சாட்டை குமுறலோடு இளைஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கோவில் அனுமதி மறுப்பு
------------------------
வடிவேல்கரை (மதுரை தெற்கு)
கருப்பசாமி கோவில், மந்தை கோயில் ஆகியவற்றுக்குள் செல்ல
முடியாது. வெளியிலிருந்தே கும்பிட வேண்டும்.
தென்னமநல்லுhர் (திருமங்கலம் தாலுகா)
முனீஸ்வரர் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை.
குராயூர்(திருமங்கலம் தாலுகா)பெரிய மாரியம்மன் கோவிலில் இருதரப்பாரும் கூட்டு வழிபாட்டிற்கு தயாராக இருப்பினும், கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மனதிற் கொண்டு, கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் கருத்து.
மேல உரப்பனுhர் (திருமங்கலம் தாலுகா)பொதுக் கோவிலில் அனுமதி இல்லை.
மேலக்கோட்டை(திருமங்கலம் தாலுகா) முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பொங்கல் வைக்க அனுமதியில்லை.
நரசிங்கம்(மதுரை கிழக்கு) மந்தை அருகிலுள்ள கோவிலுக்கு பிறசாதியினர் வழிபடும் போது தலித்துகள் செல்ல முடியாது.
செம்மினிப்பட்டி(வாடிப்பட்டி ஒன்றியம்) காளி கோவிலில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அனுமதியில்லை. திருவிழாவில் பொங்கல், தீச்சட்டிக்கு அனுமதி கிடையாது.
சோலைப்பட்டி(பேரையூர் தாலுகா) கோட்டைக் கோவிலில் அனுமதி இல்லை.
முத்துலிங்காபுரம்(பேரையூர் தாலுகா)பொதுக் கோவிலில் அனுமதி இல்லை.
சென்னம்பட்டி(பேரையூர் தாலுகா) காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை.
கொண்டையம்பட்டி(அலங்காநல்லுhர் தாலுகா) ஊர்க்கோவிலில் அருந்ததியினர் அர்ச்சனை செய்ய முடியாது. கோவில் விழா விளையாட்டுகளில் தலித்துகள் எவருமே பங்கேற்க முடிவதில்லை.
வலைசேரிப்பட்டி(மேலுhர் தாலுகா) அம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாது. வெளியிலிருந்து கும்பிடலாம்.
தனியாமங்கலம்(மேலுhர்)அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் கூட்டு வழிபாடு இல்லை, 3 ஆண்டுகளாக தனித் தனி நாட்களில் வழிபாடு.
பதினெட்டாங்குடி(மேலுhர்) விழா மேடைகளில் அனுமதியில்லை. தலைவரி வசூல் இல்லை.
காமராஜ்நகர்(உசிலம்பட்டி) திருவிழாக்களின் போது மட்டுமே செல்லலாம். அபிசேகம், அர்ச்சனைக்கு அனுமதியில்லை.
அல்லிகுண்டம்(உசிலம்பட்டி)பெருமாள்கோவில் காம்பவுண்டிற்குள் போக முடியாது. ஆனால் வைக்கோல் பிரி, வேப்பிலைகளை வெளியே கட்டுகிற பணிகளை செய்ய வேண்டும்.
கோயிலாங்குளம்(செல்லம்பட்டி) கோயில்களில் முளைப்பாரி, பொங்கல், மாவிலக்கிற்கு தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.
17 கிராமங்களில் கோவில் அனுமதி மறுப்பு நிலவுகிறது. பல கிராமங்களில் தலித்துகள் தனிக் கோவில்களை அமைத்துக் கொண்டு மற்றவர்களின் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்கிறார்கள்.
சாதியரீதியான வேலைகளுக்கு கட்டாயப்படுத்துதல்
------------------------------------------------
வடிவேல்கரை(மதுரை தெற்கு) மயான வேலைகள் கட்டாயம். சாராயம் மட்டுமே கூலி.
வேடர்புளியங்குளம் (மதுரை தெற்கு) இழவு வேலைகள் கட்டாயம்.
சாத்தாங்குடி(திருமங்கலம்) சாதியரீதியான பணிகளுக்கு நிர்ப்பந்தம்.
மேலக்கோட்டை(திருமங்கலம்)தப்படிக்கிற பணிக்கு நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.
காமராஜ்நகர்(உசிலம்பட்டி) மாடு இறந்ததும் கூலி ஏதுமின்றி அப்புறப்படுத்த வேண்டும்.
இழவு சொல்வது, மயானக்குழி வெட்டுவது கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
விரகனுhர் குழிவெட்டுவது கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மனிதனே மனிதக்கழிவை அள்ளுகிற பழக்கம் உள்ளது.
கீழப்பட்டி(செல்லம்பட்டி ஒன்றியம்) மயான வேலைகள் கட்டாயமானது. கூலி விருப்பப்படி தரப்படும்.
கோவிலாங்குளம் மயான வேலைகளுக்கு கட்டாயம். வர்ணாசிரமத்தை தலித்துகள் மீது திணிக்கிற அவலம் தொடர்கிறது. அருந்ததியர்கள் மிகவும் கடுமையான தீண்டாமைகளுக்கு ஆட்படுகிற நிலையேற்படுகிறது.
அரசு திட்ட உதவிகள் மறுக்கப்படல்
-----------------------------------
வடிவேல்கரை(மதுரை தெற்கு) 150 வீடுகளுக்கு கழிப்பறை கூட இல்லை.
ஆண்டார் கொட்டாரம்(மதுரை கிழக்கு)இலவச டிவி உள்ளிட்ட திட்டங்கள் தலித் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதில் பாரபட்சம் உள்ளது.கொட்டாம்பட்டி(மேலுhர்)தலித் பகுதியில் கட்டணக் கழிப்பறை இல்லை.
மேலவளவு(மேலுhர்)இலவச டிவி உள்ளிட்ட திட்டங்கள் சரிவரக் கிடைப்பதில்லை. ஊர்மெச்சிகுளம்(மதுரை மேற்கு)இலவச டி.வி. உள்ளிட்ட திட்டங்கள் தலித் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதில் பாரபட்சம் உள்ளது. முதியோர் பென்சன், திருமண உதவித் தொகை சரிவரக்கிடைப்பதில்லை. அரசுக் கோப்புகளில் இவ்வூர் செட்டிகுளம் என சாதியப் பெயரில் இருப்பதை மாற்ற வேண்டும். சத்திரப்பட்டி(மதுரை மேற்கு) இலவச டி.வி., கேஸ் கிடைக்கவில்லை.
சுடுகாடு, பாதை மறுப்பு
-----------------------
தென்னமநல்லுhர்(திருமங்கலம் தாலுகா) பொதுமயானத்தில் அனுமதியில்லை. சொந்த நிலைத்தையே சுடுகாடாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கச்சகட்டி பாதை இல்லை.மேற்கொட்டகை இல்லை.
மன்னாடிமங்கலம் (வாடிப்பட்டி ஒன்றியம்) 75 சதவீதம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அதாவது(1 ஏக்கரில் 75 சென்ட்)கொண்டையம்பட்டி (அலங்காநல்லுhர் தாலுகா) ஆதிக்க சாதியினர் மயானத்தில் கொட்டகை உண்டு. தலித்துகளின் இடுகாட்டில் கொட்டகை இல்லை. அருந்ததியர்க்கு சுடுகாடேயில்லை. ஆற்றோரத்தை மயானமாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதினெட்டாங்குடி(மேலுhர்)பாதை இல்லை. சுடுகாடு அளவு 8 ஒ 8 அடி மட்டுமே
காமராஜ் நகர்(உசிலம்பட்டி) பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கீழப்பட்டி(செல்லம்பட்டி) பாதை இல்லை. கெஞ்சி கூத்தாடி செல்ல வேண்டும்.
விக்ரமங்கலம் (செல்லம்பட்டி ஒன்றியம்) பாதை இல்லை. வன இலாகா பகுதி மற்றும் விலை நிலங்கள் வழியாக செல்கிறார்கள்.
ஏரவார்பட்டி(செல்லம்பட்டி ஒன்றியம்) பாதை இல்லை.
அஞ்சல் நிலைய சேவை மறுப்பு
------------------------------
அஞ்சல் பணியாளர்கள் தபால்களைச் சேர்க்க தலித் பகுதிகளுக்குள் மட்டும் செல்வதில்லை. தகவல் மட்டுமே தரப்படும். தலித் மக்களே வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண்டார் கொட்டாரம் (மதுரை கிழக்கு)
தனியாமங்கலம் (மேலுhர்)
ரேசன் விநியோகத்தில் அநீதி
-------------------------------
மூடுவார்பட்டி(அலங்காநல்லுhர் ஒன்றியம்) தலித் வார்டுகளுக்கான கிழமைகளில் செல்லத் தவறினால் பின்னர் அரசி கிடைக்காது.
மேலவளவு (மேலுhர்) 5 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 2 லிட்டரே தரப்படுகிறது. அதுவும் 1 லிட்டரே இருக்கிறது. 20 கிலோ அரிசிக்கு 18 கிலோ மட்டுமே - அதிலும் 10 கிலோ பச்சரிசியாக தரப்படுகிறது. பதினெட்டாங்குடி ரேசன் பொருள் எடையில் அநீதி. புகார் செய்யத் தயக்கம்.
அடிப்படை வசதிகளில் புறக்கணிப்பு
-----------------------------------
*மேலப்பட்டி/ஒடைப்பட்டி(திருமங்கலம் தாலுகா) தலித் பகுதிக்கு அருகில் பேருந்துகளுக்கு நிறுத்தம் இல்லை. தலைச் சுமைகளோடு ¾ ¾ கி.மி. நடக்க வேண்டியுள்ளது.
*நரசிங்கம்(மதுரை கிழக்கு) சாலை வசதி இல்லை. பொதுக் கழிப்பிடம் இல்லை.
*மாயாண்டிபட்டி(மதுரை கிழக்கு)ஆதிதிராவிடர் வீட்டுத் திட்டம் வேண்டுமென்று நீண்டகாலக் கோரிக்கை உள்ளது.
*உத்தப்புரம்(பேரையூர்) தலித் பகுதிகளில் சாக்கடைகளுக்கு மேல் சிறுபாலங்கள் கட்டினால் மீண்டும் மீண்டும் உடைக்கப்பட்டு விடுகின்றன.அவற்றில் அமர்வது விரும்பப்படவில்லை.
*மூடுவார்பட்டி(அலங்காநல்லுhர்)மராமத்து செய்யப்படாமல் அரசு வீடுகள் ஓழுகுகின்றன.
*ஊர்மெச்சிகுளம்(மதுரை மேற்கு)காலனி வீடுகள் கட்டித் தரவேண்டுமென்ற கோரிக்கை ஈடேறவில்லை. மின்சாரம், சாக்கடை வசதிகள் இல்லை.
*சத்திரப்பட்டி(மதுரை மேற்கு) கழிப்பறை வசதி இல்லை. காலைக் கடன்கள் எல்லாமே திறந்த வெளியில்தான்.
*காமராஜ் நகர்(உசிலம்பட்டி) கழிப்பறை வசதி இல்லை.
இல்ல விழா நிகழ்ச்சிகளில் பேறுபாடு
----------------------------------
* உத்தபுரம்(பேரையூர் தாலுகா) தலித் இல்ல விழாக்களுக்கு வரவேற்பு வளைவுகள், அலங்காரங்களை வழிகளில் செய்ய முடியாது.
பள்ளிக்கூடங்களிலும் சாதிய அணுகுமுறை
-----------------------------------------
* முத்துலிங்காபுரம்(பேரையூர் தாலுகா) ஆசிரியர்கள் அடிப்பதற்காகக் கூட தலித் மாணவர்களை தொட மறுக்கிறார்கள். குச்சி மூலமோ, சக மாணவனை அடிக்கச் சொல்லியோ தண்டனை தருகிறார்கள்.
*எழுமலை பள்ளியில் ஆசிரியர்களின் அணுகுமுறைகளில் பாடுபாடுகள் உள்ளது.
*தலித் மாணவர் விடுதியில் +1, +2 மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. (கொட்டாம்பட்டி, மேலுhர்)
சமுதாயக் கூட பயன்பாட்டில் பாகுபாடு
-------------------------------------
*கூத்தியார்குண்டு (மதுரை மேற்கு) தலித்துகள் செல்ல முடிவதில்லை.
*கச்ச கட்டி(வாடிப்பட்டி ஒன்றியம்) தலித்மக்கள் பயன்படுத்த இயலவில்லை.
பொதுத் தெருக்களில் நடப்பதற்கு கட்டுப்பாடுகள்
---------------------------------------------
*மைட்டாம்படி(திருமங்கலம் தாலுகா) செருப்பு அணிந்து நடப்பதற்கு தடை.
*மேல உரப்பனுhர்(திருமங்கலம் தாலுகா) செருப்பு, துண்டு அணிய முடியாது. மீறினால் தலித் பெரியவர்கள் மூலம் கண்டிக்கப்படுகிறார்கள்.
*உத்தப்புரம்(பேரையூர் தாலுகா)ஆதிக்க சாதியினர் தெருக்களில் செல்ல முடிவதில்லை.
*தனியாமங்கலம்(மேலுhர்)நல்ல உடையணிந்து சென்றால் இளக்காரப் பேச்சுக்கள்.
*அல்லிகுண்டம்(உசிலம்பட்டி) செருப்பு அணிந்தோ, சைக்கிளிலோ செல்ல முடியாது.
தலித் பெண்கள் சீண்டல்களுக்கும், கேலிகளுக்கும் ஆட்படல்
---------------------------------------------------------
*முத்துலிங்காபுரம்(பேரையூர் தாலுகா) பொது இடங்களில்
*தனியாமங்கலம் (மேலுhர்) ரேசன் கடை, பேருந்து நிறுத்தங்களில் (பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கடையில் சாராயம் விற்கப்படுவதால் அங்கு சீண்டல்கள் அதிகம்).தலித்துகளின் நந்திவர்மா கோவிலுக்கு நன்கொடை அளிப்பதற்கு கைம்மாறாக வழக்குகள் வாபஸை முன் நிபந்தனை விதித்தல்.
*தொட்டப்ப நாயக்கனுhர்(உசிலம்பட்டி ஒன்றியம்) பொது இடங்களில்
* அல்லிக்குண்டம் (உசிலம்பட்டி ஒன்றியம்) பொது இடங்களில்
சாதி மறுப்பு திருமணங்கள்
--------------------------
* சென்னம்பட்டி(பேரையூர்) சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் ஊருக்குள் வர முடிவதில்லை.
*கொண்டையம்பட்டி(அலங்காநல்லுhர் தாலுகா) கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.தம்பதிகள் பிரிக்கப்பட்ட அனுபவங்கள் உண்டு.
பேருந்து நிறுத்தம், பேருந்து பயணத்தில் பாரபட்சங்கள்
--------------------------------------------------
பேருந்து நிறுத்தத்தில் தலித்துகள் குத்த வைத்தே உட்கார முடியும். பேருந்தில் ஏறும் போது தலித் சிறுவர், சிறுமிகள் மற்ற சிறுவர், சிறுமிகளோடு போட்டி போட முடியாது. (உத்தப்புரம் - பேரையூர் தாலுகா)
கிராமப் பொது நிகழ்ச்சிகளில் பாரபட்சம்
------------------------------------
கோயில் மந்தை அமர்வு, ஏலம், குத்தகைகளின் போது ஊர்ப் பொது மேடைகளில் தலித்துகள் ஏறமுடியாது.(அட்டப்பட்டி - மேலுhர் தாலுகா)
*கிராமசபைகளுக்கு அழைப்பு கிடையாது.(பதினெட்டாங்குடி - மேலுhர் தாலுகா, ஊர்மெச்சிகுளம் - மதுரை மேற்கு)
*கிராம சபைகளில் சமமாக அமர முடியாது. (கீழப்பட்டி - செல்லம்பட்டி)
கூலியில் பாகுபாடு
------------------
*விவசாய வேலைகளில் மற்றவர்களை விட ரூ.25 கூலி குறைவு. (அட்டப்பட்டி - மேலுhர் தாலுகா)
* உள்ளுரில் தினக் கூலி ரூ.30 மட்டுமே. வெளியூர்களில் ரூ.80 கிடைக்கிறது. (வலைசேரிப்பட்டி - மேலுhர்)
பேரையூர் தாலுகா உத்தப்புரத்தில் அரை கி.மீ. துhரத்திற்கு தலித் பகுதியைப் பிரிப்பதற்கான எல்லைச் சுவர் எழுப்பப்பட்டிருப்பது சாதியப்பாகுபாட்டின் உச்சகட்டம் ஆகும்.
தீண்டாமை பல்வேறு வடிவங்களில் மதுரை கிராமங்களில் நீடிப்பதை நம்மால் இக்கள ஆய்வு மூலம் அறிய முடிகிறது. தலித் மக்கள் நமது கள ஆய்வாளர்களிடம் பகிர்ந்து கொண்டதை - அப்பகுதியிலுள்ள பிற தலித் மக்களிடமும் பேசி உறுதிப்படுத்தி ஆவணமாக்கியுள்ளார்கள். தீண்டாமைக்கு எதிராக, ஒடுக்குமுறைகளைக் களைந்தெறிய அரசு மேற்கொள்ள வேண்டிய நேர்மறை முயற்சிகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக