
பால்க்கார பாட்டிக்கு
எழுதப்படிக்க தெரியாது.
உழக்குக் கொண்டு
ஊற்றும் பாலுக்கு
கணக்காய்
கரிக்கோடு வரைவாள்.
தை மாத வெள்ளைப்பூச்சில்
சுவர்கள் ஜொலித்தாலும்
அவள் கிழிக்கும் கோட்டிற்கு
எதிர்ப்பு என்பது எழுவதில்லை.
பால்க்கார பாட்டிக்கு
ஒருநாள் பாலூற்றி
காரியம் செய்தார்கள்.
இப்போது அவளது பேத்தி
பால் ஊற்றுகிறாள்.
கிழவி வரைந்த கோடு அருகே
புதிய கோடு ஏதும்
தோன்றவே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக