வெள்ளி, 9 ஜனவரி, 2009

சங்கரா


உன் வீட்டுக் கக்கூஸ்
அடைத்துவிட்டதென
எடுத்துவிட
ஆள் அனுப்பிய நீ
புறவாசல் வழியாக
என்னைப் போகச்சொல்கிறாய்.
மலம் கழிக்க
உனக்கு ஆசனவாயும்
அதைக்கழுவ கரங்களும்
இல்லையென்றால்
புறவாசல் வழியே போக
சித்தமாயிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: