வெள்ளி, 9 ஜனவரி, 2009

காக்கைகள் இப்போது வருவதேயில்லை.


நெருப்பு தகிக்க வேண்டிய
அடுப்பில்- குட்டிகளோடு
விளையாடிக் கொண்டிருக்கிறது பூனை.
விருந்தினர் வந்துவிடுவார்களோ
என்ற சஞ்சலம். . .
கரையும் காக்கைகளை
கல்லெறிந்து வீசியும்
விரட்ட முடியவில்லை.
சவுரி முடி கொண்டு
காக்கைளை விரட்ட
எத்தனித்த உபாயமும் தோற்றுப்போனது.
கடைசியாக
கவட்டை வார் கொண்டு
கல்லெறிந்ததில் காக்கை ஒன்று
இறந்து போனது.
புங்கை மரக்கொப்பில்
ஓடுகளின் முகட்டில்
வந்தமரும் காக்கைகள்
இப்போது வருவதேயில்லை.
கோடைவிடுமுறையென
பெட்டிபடுக்கையோடு
வந்து சேர்ந்த உறவினர்
கவட்டை வாருக்கு
காணாமல் போவாரோ?

கருத்துகள் இல்லை: