

வெளிச்ச சுவாசத்தில்
இரைதேடும் இளங்குஞ்சுகளுக்காக
எப்போதோ வாங்கிய பஞ்சாரம்
இந்த முறையும்
உபயோகப்படவில்லை.
இருபத்திரெண்டு நாளாய்
அலகால் கோதி
அடிவயிற்றில் அடைகாத்தும்
முச்சந்தியில் உடைபட்டது
எல்லாமுட்டைகளும்.
நாசியில் குத்திச் சொருகப்பட்ட
இறகோடு
இன்னமும்
அடை மூலையைச்சுற்றி
அலைகிறது தாய்க்கோழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக