ஞாயிறு, 4 ஜனவரி, 2009

வண்ணங்களால் நிரம்பும் வாழ்க்கை


வண்ணங்களால்
நிரம்பி வழிகிறது
வாழ்க்கை.
ஒவ்வொரு நாளும்
சாலையைக் கடக்கையில்
பச்சை சிக்னலைப் பார்த்து போ
என அறிவிக்கும்
போக்குவரத்து காவலரும்
செவ்வாழை டஜன் நாற்பது என
விளிக்கும் பழக்கடைக்காரரும்
டிசம்பர் பூ
வாங்கலையோ என்ற குரலும்
கலர்கோலப்பொடி
வாங்கி வாருங்கள் என்ற
துணையின் கோரிக்கையும்
வானவில் தெரியுது
இன்று மழை பெய்யும் என்ற
சகபயணியின் வானிலை அறிவிப்பும்
வண்ணங்களை குலைத்து பூசுகிறது.
கருப்புக்கண்ணாடிக்குப் பின்
தெரியும் விழிகளின்
எண்ணங்களுக்கு ஏற்ற
வண்ணங்களை
பூசி மகிழ்கிறது கைத்தடி.

கருத்துகள் இல்லை: