
சாவு நாள் தெரிந்தும்
வாழவேண்டுமென்ற வைராக்கியத்துடன்
வாழ்ந்தவன் செத்துப்போனான்.
குயில்தோப்பில்
பாடிப்பறந்த குயில்
தன் இசையை நிறுத்திக்கொண்டது.
ஊர்முழுவதும்
நட்பைச்சம்பாதித்த
அவனின் மரணம் குறித்த செய்தி
ஒரு ரகசியம் போல பாதுகாக்கப்பட்டதால்
அழுகுரல் எதுவுமின்றி
எரியூட்டப்பட்டு விட்டது
அவனது உடல்.
ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த
பூ இதழ்களில் இருந்து
உதிர்ந்து கொண்டிருக்கிறது
அவன் பேச நினைத்த வார்த்தைகள். . .
அது எதுவாய் இருந்திருக்கும்?
(புதூர் கண்ணனுக்கு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக