ஞாயிறு, 4 ஜனவரி, 2009

ஆகையினால். . .


வேட்டைக்காரனின்
துப்பாக்கிச்சத்தம் கேட்டு
அலறித்துடித்துப் பறந்து
மீண்டும்
கூடுநோக்கித்திரும்பும்
பறவை போல
ஒவ்வொரு முறையும்
வீடு திரும்புகிறேன்.
சொற்களைக் கற்களை வீசும்
அப்பாவிடம் தான்
வேலை தேடி அலைந்ததால்
விரல் அச்சுப்பதிந்த
செருப்பை மாற்ற
பணம் கேட்க வேண்டியுள்ளது.
அவர் பார்வையிலா
பட்டுத்தொலைக்க வேண்டும்
நானும்,அவளும்!
தெண்டச்சோறு
வேலையில்லா வெட்டிப்பயலோடு
சேரப்போகிறது
காதல் உனக்கு ஒருகேடா"
வார்த்தைகளில்
நஞ்சுதடவிப்பார்க்கும்
அப்பாவின் கோபத்திற்காக
செத்துப்போகலாம்.
சொத்து சேர்க்காமல்
செத்துப்போன
அவருடைய அப்பாவை இன்னமும்
அப்பா திட்டுகிறார்.
செத்தாலும் திட்டுவார் என்பதால்
சாகாமல் இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: