ஞாயிறு, 4 ஜனவரி, 2009

அன்பளிப்பு


பிறந்தநாள் பரிசென
அழகான பேனா கொண்டு வந்து
கொடுக்காமல் சென்றுவிட்டாய்.
பேனா அன்பளிப்பு
பிரிவு ஏற்படுமென்று
அக்கா சொன்னது
அந்த நேரத்தில் உதித்ததென்றாய்.
அன்பளிப்பு பெறமுடியாது
அபகரிக்கப்பட்ட அந்த பேனா
பத்திரமாக இருக்கிறது
நீ கொடுத்த திருமணப்பத்திரிக்கையோடு.

கருத்துகள் இல்லை: