திங்கள், 15 டிசம்பர், 2008

வார்த்தைகள் கேட்ட காலம்


விடியல் பொழுதில்
உதிக்கும் கனவில்
ஷர்ப்பம் தீண்டினால்
கெட்ட காலம் ஆரம்பம் என
பெரியம்மாள் கூறுவாள்.
காலங்கள் கடந்து போனாலும்
காதில் ஒலிக்கிறது அவ்வார்த்தை.
இரவு நேர நாடக இம்சையை
கண்ணுறாது சேனலை
வேறு பக்கம் திருப்பினால்
நேனஷனல் ஜியோகிராபிக்கில்
குவிந்து நெளியும் ஷர்ப்பங்கள்
அதிகாலை கனவில் வந்து
படம் எடுத்து ஆடும்.
காலை நேரக்கனவிற்குப் பின்
கெட்டகாலம்
வந்ததோ என்னவோ
பெரியம்மாவிடம்
வார்த்தைகள் கேட்ட காலம்
நினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: