
கல்வீசுவதும்
கடப்பாறை தூக்குவதும்
உங்களுக்குப் புதிதல்ல.
துப்பாக்கி எடுப்பதும்
தேசப்பிதாவை கொல்வதும்
உங்களுக்குப் புதிதல்ல.
கர்ப்பிணியின் வயிற்றை
சூலாயுதத்தால் கிழித்து
சூல்கொண்ட மகவை
நெருப்பில் பொசுக்குவதும்
உங்களுக்குப் புதிதல்ல.
துறவிகள் வேஷம் தாங்கிய நீங்கள்
வீசும் கற்களை
கவனமாய் எடுத்து
பத்திரப்படுத்தி வைத்துள்ளோம்
மதவெறிக்கு சமாதி கட்ட..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக