ஞாயிறு, 8 ஜூன், 2014

தென் மாவட்ட மக்களின் உயர்கல்விக் கனவு நனவாகுமா? மதுரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிலம் கிடைக்குமா?

தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான அண்ணா பல்கலைக்கழக கிளை மதுரையில் துவக்கப்படும் என கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையை ஆளுங் கட்சியினரும், அதிகாரிகளும் மேற்கொண்டு வருவதால், 4 ஆண்டுகளாக கட்டிடம் கட்ட இடம் தேடி `அலைகின்றனர்.’தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறுவதற்காக அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டமன்றத்திலும் இது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தது.
83.71 ஏக்கர் நிலம்
கடந்த திமுக ஆட்சியின் போதுமதுரையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் அமைப் பதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தென் தமிழகத்தின் உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மதுரை,சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 36 கல்வி நிறுவனங்களின் 15 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகம் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராசர் பல்கலை. கல்லூரியின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இப்பல்கலைக்கு நிரந்தர கட் டிடங்கள் கட்ட சர்வேயர் காலனி அருகில் உள்ள கொடிக்குளம் கண் மாயில் 83.71 ஏக்கர் இடத்தை நில உரிமை மாற்றம் செய்வதற்கான முன்நுழைவு அனுமதி வழங்கி அரசாணை ( எண்:398) வெளியிடப் பட்டது. கொடிக்குளம் கண் மாய் புறம்போக்கில் உள்ள83.71 ஏக்கர் நிலம் மேலூர் பொதுப்பணித்துறை பெரியார்பிரதான வாய்க்கால் செயற் பொறியாளர், இந்த கண்மாயினை அரசின் அனுமதியைப் பெற்று, நில உரிமை மாற்றம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த நிலத்தினை மதுரை அண்ணாதொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யப்பட்டது. கண்மாயின் வடக்குப் பகுதியில் இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகளும், கண் மாயில் முட்புதர்கள் முளைத்து காணப்படுவதாலும், இதே நிலப்பகுதியில் உள்ள 1,214 சதுர மீட்டர் மயானம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தாலும் இந்த இடம் நில உரிமை மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாகவும் அரசாணையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்ற பின் பல்கலை. பிரிப்புகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக் கப்பட்டன. மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை நிர்வாக அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டது. மதுரை மண்டல அலுவலகத்திற்கான கல்வி சார்ந்த கட்டிடங்கள் கட்ட தலா 30 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித் தார்.
நீதிமன்றத் தடை
இந்த நிலையில் கொடிக்குளம் கண்மாயில் அண்மையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கட்டஅனுமதி வழங்கப்பட்டது. அதன் படி அண்ணா பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொதுப்பணித்துறை தொழில்நுட்ப பிரிவு சார்பில் கட்டுமானப் பணிகளுக்கு 28.59 கோடி ரூபாய் செலவாகும் என்ற தோராய மதிப்பீட்டையும் சமர்பித்தது. இந்தப் பரிந்துரைக்கு துணைவேந்தரும் ஒப்புதல் கொடுக்க, நிதிக்குழுவிற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
இச்சூழலில் கொடிக்குளம் கண்மாயில் அண்ணா பல்கலைக் கழக கட்டிடம் கட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு வர் நீதிமன்றம் போன போது, அரசின் சார்பில் ஆஜரான கூடுதல்அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன், கொடிக்குளம் கண் மாயில் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதன் பேரில் கொடிக்குளம் கண்மாயில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தது.
இடம் தேடும் மாவட்ட நிர்வாகம்
இந்த நிலையில் மாற்று இடத்தைமதுரை மாவட்ட நிர்வாகம் தேடஆரம்பித்தது. அரசு தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட்ட இடையப் பட்டியில் தீர்வை ஏற்படாத அரசு தரிசு நிலம் சுமார் 50 ஏக்கர் உள்ளதை பார்வையிட்டது. இந்த இடத்திற்கு அருகிலேயே 80 ஏக்கரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, 45 வீரர்களை கொண்டபட்டாலியன் இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த இடத்தை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படு கிறது. அடுத்ததாக, சக்கிமங்கலத்தில் சுமார் 70 ஏக்கர் நிலத்தை மாவட்டநிர்வாகம் அண்ணா பல்கலைக் கழகம் அமைப்பதற்கு பார்வை யிட்டது.
நத்தம் புறம்போக்கு மற்றும் தீர்வை ஏற்படாத அரசு நிலமாக இது உள்ளது. இந்த இடத்தில் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும், பல்கலைக்கழக அதிகாரிகளும் விரும்பியுள்ளனர். ஆனால், இங்கு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமையமதுரை மாநகராட்சி “உயர்“ பொறுப்பில் உள்ள ஒருவர் விரும்பவில்லை என்று கூறப்படு கிறது. இந்த நிலம் மதுரை மாநக ராட்சிக்கு சொந்தமானது என சிலர் கூறினாலும், அரசு நிலமாக உள்ளது என்று வருவாய்த்துறையினர் கூறுகின்றனர்.
இதன் காரண மாகவே இந்த இடம் புறக்கணிப் பிற்குள்ளாகியுள்ளது.இதனால், நொந்து போன மதுரை மாவட்ட நிர்வாகம், அடுத்ததாக, கீழக்குயில்குடிக்குச் சென்றது.சுமார் 12 ஏக்கர் நிலத்தில் அண்ணாதொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கலாம் என்றும் யோசித்துள்ளது. ஆனால், ஏற்கனவே, இந்தப்பகுதியில் பலருக்கு அரசுசார்பில் பட்டா வழங்கப்பட்டுள் ளது என்றும் கூறப்படுகிறது. இப்படியாக இடம் தேடும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைய ஒதுக்கப் பட்ட நிதி, கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர் மானம் அரசாணையாக மாறியும் நிறைவேற்றப்படாமல் இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களின் கண்டு கொள்ளாத தன்மையின் வெளிப்பாடாகவே உள்ளது. தென் மாவட்ட மாணவர் உலகம் என்ன செய்யப்போகிறது?
- ப.கவிதா குமார்

கருத்துகள் இல்லை: