சனி, 27 ஆகஸ்ட், 2011

செருப்பு





சாலையோரம் முதல்
குளிர்சாதனம் பொருத்திய
கடைகள் வரை
அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
செருப்புகள்.
மனிதர்கள் மட்டும் தான்
செருப்புகள் அணிவார்களா?
புதிதாகக் கட்டப்படும்
வீடுகளின் வாசல்களில்
காவலுக்கிருக்கும்
திருஷ்டி பொம்மைகளின்
கால்களில் செருப்புகள்!
விக்ரமாதித்தன், வேதாளம்
இதில் ஏறினார்களா
எனத்தெரியவில்லை . . . .
காய்த்துத் தொங்கும்
முருங்கை மரங்களில்
செருப்புகள்!
எவ்வளவு விலை உயர்ந்த
செருப்பானாலும்
வீட்டின் வாசலிலேயேத்தான்
கழட்டி விடப்படுகின்றன.
பிறகெப்படி
பாரதத்தை
பதினான்கு ஆண்டுகள்
ஆண்டது செருப்பு?







4 கருத்துகள்:

Elangovan சொன்னது…

seruppu pinjudum

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

செருப்பின் மதிப்பு அதை அணிபவர்களுக்குத் தக மாறுபடுகிறது.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

“செருப்பை வெளியே கழற்றிவிட்டு
அழுக்கு மட்டும் உள்ளே சென்றது

கோயிலுக்குள்ளே!!

என்றொரு கவிதைதான் தங்கள் கவிதையைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது.

தங்கள் கவிதை நன்றாகவுள்ளது.

இன்றுதான் தங்கள் வலைப்பக்கத்துக்கு முதலில் வருகிறேன்.

அருமை.

கவிதாகுமார் சொன்னது…

முனைவர் இரா.குணசீலன் அவர்களை இதனால் வரவேற்கிறது