ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

ஒளிந்து கிடக்கும் மிருகம்






னவு வராத நாட்களில்
விண்மீன்களைப் பிடித்து
கைவிரலுக்குள்
வைத்துப் பார்க்கும் போது
சின்னதாகவே தெரிகிறது
வானம்.

வ்வொரு முறையும்
சாட்டை சொடுக்கி
கையேந்தும் யாசகனின்
எதிர்பார்ப்பென்பது
இல்லையென்ற சொல்லாவது.

டிந்து கிடந்த கோவிலுக்குள்
சிதைந்து நிற்கும்
அம்மன் சிலையோடு
யாரும் பேசுவதில்லை.
துடியான சாமியென
ஊர் பேசிக்கொண்டிருக்கிறது.

டுகாட்டில்
துவங்குகிறது
இறந்தவன்
வாழ்ந்த வாழ்க்கை.

றி மெல்லும் போது
தனது உள் கன்னச்சதையை
தவறி கடித்து விடும்
சராசரி மனிதனிலும்
ஒளிந்து கிடக்கிறது
ஒரு மிருகம்.

கருத்துகள் இல்லை: