தினமலர்
தீண்டாமையை ஒழிக்க
நடவடிக்கை எடுக்கவில்லை
மார்க்சிஸ்ட் கருத்து
மதுரையில் ப.கவிதாகுமார் எழுதிய "உத்தப்புரங்களும், சாதியத்தின் அந்தப்புரங்களும்' என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை வெளியிட்ட மார்க்சிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:பத்திரிகை, ஊடகங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் பிரச்னை குறித்து அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன. 1968ல் கீழவெண்மணி கிராமத்தில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கூட அதிகளவில் வெளியிடப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் இன்றும் கூட ஆதிதிராவிடர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. திறக்கப்பட்ட பாதையில் செல்ல முடியவில்லை. நிழற்குடை அமைக்க முடியவில்லை. திராவிட கட்சிகள் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். த.மு.எ.க.ச.,மாநில பொதுசெயலாளர் தமிழ்ச்செல்வன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்,, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
வெப் துனியா தமிழ் இணையம்
தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை
திராவிட இயக்கங்கள் கைவிட்டுவிட்டன தமிழகத்தில் பெரியாருக்குப் பிறகு தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை திராவிட இயக்கங்கள் கைவிட்டுவிட்டன'' என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாற்றினார்.
மதுரையில் கவிஞர் பா.கவிதாகுமாரின் "உத்தப்புரங்களும் சாதியத்தின் அந்தப்புரங்களும்'' என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டு அவர் பேசுகையில், பத்திரிகைச் செய்தியாளர் செய்திகளைச் சேகரிப்பதுடன், செய்திக்குப் பின்னால் உள்ள பிரச்சனைகளையும், அதில் உள்ள அரசியல் பின்புலங்களையும், அரசின் அணுகுமுறையையும் கட்டுரையாகத் தனது கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துவது பாராட்டத்தக்கதாகும்.
இந்நூலில் அதுபோல பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. செய்தியாளர்கள் கட்டுரைக்காக களத்துக்குச் செல்வதால் அவர்கள் குடும்பத்தைப் பிரிவது என்பது தவிர்க்க முடியாதது. தீண்டாமை, இலவச நிலம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்நூலில் மார்க்சிய கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தை அரசியல் பிரமுகர்களே ஆக்கிரமித்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ரஷ்யப் புரட்சி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை செய்தியாளர்கள் எழுதிய புத்தகங்களே உலகுக்கு விளக்குவதாக உள்ளன.
இப்போது தி.மு.க அரசும் தீண்டாமை குறித்த பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் சுட்டிக்காட்டிய பிறகே அதில் தலையிடுகிறது. பெரியாருக்குப் பிறகு திராவிட இயக்கங்கள் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை கைவிட்டுவிட்டன.
இப்போது கல்விக் கட்டணம் பெரும் பிரச்சனையாக உள்ளது. தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிப்பது குறித்து கமிஷன் அறிக்கையின்படி அரசு தீர்மானித்தும், அதை தனியார் கல்வி நிலையங்கள் கடைப்பிடிக்கும் வகையில் அரசு செயல்படுத்தமுடியவில்லை என்று ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாற்றினார்.
அதிகாலை டாட் காம்
மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரால் மனிதகுலம் உலகத்தின் முன்பு தலை குனிந்த சம்பவம் யாவரும் மறந்திருக்க முடியாது" இந்த வரிகளுக்குள் இருக்கும் அர்த்தங்கள் சுடச்சுட சுட்டுக்கொண்டேயிருக்கும். அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கந்து வட்டிக்கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செலாளர் தோழர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் எந்த லட்சணத்தில் அமலாகிறது என்பதற்கு நல்ல உதாரணம். இப்படி தனது ஆய்வுக்கட்டுரைகள் மூலம் சமூக பிரச்சினைகளை வெட்ட வெளிச்சமாக்கி தந்திருக்கிறார் பத்திரிக்கையாளரும், கவிஞருமாகிய ப.கவிதா குமார். இவரின் "உத்தபுரங்களும் சாதியத்தின் அந்தப்புறங்களும்" என்ற நூல் வெளியீ்ட்டு விழா மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த மாலை நேர புத்தக வெளியீட்டு விழாவிற்கு பார்வையாளர்கள் வந்ததோடு "அழையா விருந்தாளியாக வந்த மழையையும்" வரவேற்றதோடு மதுரை ராயப்பன் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சியும் முதல் நிகழ்வாக இதம் சேர்த்தது. அடுத்து கவிஞர் ராசா தலைமையேற்க , இரா.பழனிவேல் வரவுற்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் "உத்தபுரங்களும் சாதியத்தின் அந்தப்புறங்களும்" நூலை வெளியிட அதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.தமிழ்செல்வன் பெற்றுக்கொண்டார். அப்போது ஆர்வமாய் கைதட்டியவர்கள், உற்சாகமாய் கைதட்டியவர்கள் என்றும் திரும்பி பார்க்க முடிந்தது.
"அர்த்த சாஸ்திரம், மனு சாஸ்திரம், பகவத் கீதை இதுக்குள்ளேயும் சாதீயம் இருக்கிறது. பிறக்கும்போது சாதி தீர்மானிக்கப்படுகிறது" என்று தனது வாழத்துரையில் மழைக்கு சாதகமாய் தீயை மூட்டி பேசினார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம். முதல் பிரதியை பெற்றுக்கொண்டு பேசிய ச.தமிழ்ச்செல்வன் "இந்த உத்தபுரங்களும் சாதியத்தின் அந்தப்புறங்களும் என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து விட்டபோது எப்படிப்பட்ட தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. சாதீயம் குறித்த கட்டுரைகள் இதில் அதிகமாக இருந்தாலும், ஒரு படைப்பு பல நினைவுகளையும், பல காலங்களையும் கிளர்ச்சிக்குள்ளாக்க வேண்டும். இதுவும் அப்படி "பள்ளிப்பாளையம்" போன்ற கட்டுரையால் அதனை உருவாக்குகிறது. ஆதிக்க சாதிகளுக்கு உத்தப்புரம் ஒரு கொடையாக இருக்கிறது. அத்துடன் நாம் அரசியல் ரீதியான விசயங்களை சொந்த அனுபவமாக கொடுக்கும்போது, அது மக்களிடம் தீப்பிடிப்பதுபோல் எழுச்சியூட்டும்.
இந்நூலை வெளியிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் "ஒரு பத்திரிகையாளர் செய்திகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய விசயங்களை ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகளாக கொடுத்திருக்கிறார். அதை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தும் தந்திருக்கிறார். "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" என்ற கட்டுரையில் பற்பல விஷயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார். கல்வி கடைத்தெருவில் விற்கும் பொருளாக மாறியிருக்கிறது என்றும் சாடியிருக்கிறார். ஒரு சமூக மாற்றத்திற்கான முயற்சி, புரட்சிகரமாக அவரது கட்டுரைகளில் தெரிகிறது. "உத்தப்புரம்"என்பது ஒரு தீண்டாமையின் சின்னமாக இருக்கிறது. ஆனால் பெரியார்க்கு பிறகு அரசு தீண்டாமை ஒழிப்பை கைவிட்டுவிட்டது. ஒரு நிருபர் எந்தளவுக்கு முன்னுதாரனமாக செயல்படுகிறார் என்று இந்த புத்தகம் மூலம் பறைசாட்டியிருக்கிறார். இவர் இன்னும் அடுத்தடுத்து பல சாதனைகள் படைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என்றார்.
ப.கவிதா குமார் ஏற்கனவே மூன்று கவிதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். இது தீக்கதிர், ஜனசக்தி, கீற்று இணையத்தளத்தில் தன் எழுத்துக்களை கோர்த்தவர் அதை அப்படியே "உத்தப்புரங்களும் சாதியத்தின் அந்தப்புறங்களும்" என்ற தொகுப்பாக்கி தந்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பு கட்டுரையிலும் சமூகத்தின் கண்ணீரை கணலாய் காட்டிவிட்டு, "கண்ணாமூச்சி ரே...ரே... காதடைச்சா ரே...ரே..." என்ற தலைப்பிலான கட்டுரையில் மட்டும் நம் பள்ளிப்பிராயத்தையும், பால்ய வயது குறும்பையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வாய்ப்பும் தந்திருக்கிறார். "மழை விட்டுருச்சா... இன்னும் விடலையா.." என்று பார்வையாளர்கள் ஒவ்வொருவராக காதை கடிக்காமல் எழுந்து செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவசர அவசரமாக ப.கவிதா குமாரின் ஏற்புரையில் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி நன்றியை தெரிவித்து கொண்டார். முறையாக அ.கஜேந்திரன் நன்றி கூறி விடைபெறுவதற்குள் "மழை மண்ணோடு உறவாடிக்கொண்டிருந்தது".

வர்ணனை ; ஆர்.கணேசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக