கதிரறுத்து கிறுகிறுத்து
கண்ணும் ரெண்டும் நீலம்பூத்து . . .
சின்னக் கட்டாகக் கட்டச் சொல்லுறீயே-கண்ணைச்
சிமிட்டுறியே கருத்தக்குட்டி நீயே
சில்லறைய சிந்துன சிரிப்புல- என்மனசத்தான்
சிரச்சேதம் செஞ்ச சிறுபுள்ள
தண்ணீக் கொடமெடுத்து
தலைநனைஞ்சு உடல்நனைஞ்சு
தங்கம் நீ போககையில
என் அங்கமெல்லாம் கொதிக்குதடி-காதல்
தன்னால உதிக்குடி. . .
அள்ளி முடிஞ்ச கூந்தலிலே
என்னச் சுமந்து போறவளே
இரக்கம் இல்லையா உனக்கு-என்னை
இறக்கிவிட்டுப் போயேன்டி சிறுக்கி ( கதிரறுத்து )
மாமதுரை மல்லிகை நீ-என்
மனசக் கெடுக்குற நீ
கண்ணும் ரெண்டும் பூத்துப்போச்சுடி-மாமன்
கண்ணும் ரெண்டும் பூத்துப்போச்சுடி-உன்னைக்
காணலியே நேத்து ராத்திரி-கண்ணில்
ஏத்திவச்சேன் காதல் பூத்திரி. . . .
அந்தி நல்லா சாஞ்சுருச்சு
ஆளு அரவம் கொறஞ்சிருச்சு
வெரசா நீ வரவேணும்- கொஞ்சம்
வெட்கத்தையும் விடவேணும் . . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக