புதன், 24 பிப்ரவரி, 2010

முரசொலியின்"நாகரிகம்"

ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் வாழ்த்து தெரிவிப்பது மரபாகும். அவர் அரசியல் தலைவராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து வாழ்த்து தெரிவித்ததைத் தனக்கே உரிய பெருந்தன்மையுடன்(!) பெட்டிச்செய்தியாக முரசொலி வெளியிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களுக்கும் கிடைக்காத பாக்கியம் வைகோவிற்கு கிடைத்துள்ளதாக முரசொலி புலம்பியுள்ளது.

 தாங்கள் கேட்ட மத்திய அமைச்சர் பதவிகள் கிடைக்காததால் காங்கிரசை பிளாக் மெயில் செய்த திமுக, இப்போது காங்கிரசோடு கூடிக்குலாவிக் கொண்டிருக்கிறது. கிணற்றில் இருந்து தலைநீட்டி அவ்வப்போது மூச்சு விடும் ஆமையைப் போல கூட்டாட்சி குறித்து கதைக்கும் திமுக, அதை தமிழகத்தில் அமுல்படுத்த மறுக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு ஆட்சி செய்து கொண்டு, அக்கட்சியைச் சேர்ந்த பலர், தமிழக மந்திரி சபையில் இடம் வேண்டும் என கோரிக்கை எழுப்பினாலும், அப்போதெல்லாம் மௌனத்தையே தனது மொழியாக கொண்டுள்ள முரசொலி , மற்றக்கட்சிகளின் கூட்டணியைப் பற்றி வாய் கிழியப் பேசுவது நல்ல வேடிக்கை.

கருத்துகள் இல்லை: