புதன், 13 ஜனவரி, 2010

ஒளி திருடுபோவதை


என் கஷ்டம் கண்டு
கழிவிரக்கம் கொண்டு
காட்சி தந்தாலும்
கற்பூர ஆராதனை மட்டும்
செய்ய மாட்டேன் கடவுளே. . .
காற்றால்
ஒளிதிருடுபோவதை
காலத்தாலும்
அனுமதியாதென் நெஞ்சு
( கீற்று இணையத்தில் வெளிவந்த கவிதை )

கருத்துகள் இல்லை: