வெள்ளி, 15 ஜனவரி, 2010

தொலைந்தமுகம்






பெரும்புயலால் மையம்கொள்ளப்பட்ட

பிரதேசமாய் மாறியிருந்தது

எனது வீடு.

கொட்டிக்கவிழ்க்கப்பட்டுக் கிடந்த

துணி, மணிகள்

பெட்டிகள்

புத்தகங்கள்

என எங்கினும் தேடியும்

அகப்படவில்லை

நாசியோரம் ஒட்டியுள்ள

மச்சத்தின் அழகோடு

காட்சித்தந்த அந்தப்புகைப்படம். . .

ஆல்பத்தில் இருந்து

அவளது அனுமதியின்றி


களவாடப்பட்டதைப் போலவே

பள்ளி பயணத்திற்காக

எடுக்கப்பட்ட பால்ய வயது

எனது புகைப்படத்தையும்

எனக்குத் தெரியாமல்

எடுத்துச்சென்றாள்.

மதுரைநகர வீதிகளில்

எங்காவது தென்படமாட்டாளா

என்ற நினைப்போடு

அவளது முகத்தை தொலைத்துவிட்டு

புகைப்படத்தில் தேடியலைவதைப்போல

அவளும் தேடிக்கொண்டிருக்கலாம்

எனது முகத்தை.




கருத்துகள் இல்லை: