தமிழக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் திடீரென திமுகவிற்கு ஆதரவு என்ற குண்டை வீசியுள்ளார். . ஏன் எதற்கு என யாரும் கேள்வி கேட்டடால் அவ்வளவு தான்.
தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு அய்யாவின் இந்த திடீர் பல்டிசில சுவரசியமாகன கதைகளைக் கொண்டதாக உள்ளது.
திண்டிவனம் அதிமுக தொண்டர் கொலை வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கிவிட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை விசாரணைக்கு ஏற்கப்பட்டது ரத்து செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கைக் காரணம் கூறித்தான் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது.
உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில்,, கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி தேதி சட்டசபைத் தேர்தல் பணியாற்றிவிட்டு, திண்டிவனம் அருகே உள்ள எனது வீட்டில் அதிமுக தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது பிரதீபன், ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் எங்களைத் தாக்கியது. அவர்களைத் தடுக்க முயன்ற முருகானந்தம் அதே இடத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போதைய மத்திய அமைச்சர் அன்புமணி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அப்ரூவராக மாற முயன்ற ரகு என்பவரும் கொலை செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுவை திண்டிவனம் முதலாவது விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கில் முக்கிய எதிரிகளான ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பெயர்களை நீக்கி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் சண்முகம் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, அதிமுக தொண்டர் கொலை வழக்கில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பெயர்களை நீக்கி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு திண்டிவனம் முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. இந்த வழக்கில் சண்முகம், ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோருக்கு மாஜிஸ்திரேட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இருதரப்பு விளக்கங்களையும் கேட்ட பிறகு, பெயர்கள் நீக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்பது குறித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் டாக்டர் அய்யா, திமுகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் திமுகவிற்கும், பாமகவிற்கும் நடந்த மோதல்கள் ஆங்கிலப்படங்களையும் விஞ்சி சி விடும் வகையில்விடும இருந்தது. வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை பாமகவினர் எரித்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ராமதாஸின் கொடும்பாவியை எரித்தனர். திமுக ஆட்சிக்கு 'ஜீரோ' மதிப்பெண் போட்டதால் தான் ராமதாஸை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியம் ஆக்கினார்கள் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். ஜீரோவானவர் ஏன் திமுக பக்கம் வலைவீசுகிறார். இதில் கலைஞர் சிக்குவாரா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக