
நாய்கள் பெரும்பாலும்
நன்றி உடையவை தான்- ஆனாலும்
வீட்டு நாயானாலும்
வெறி பிடித்தால்
அடித்துத்தான் கொல்ல வேண்டியிருக்கிறது.
வீட்டு நாய்க்கே
இந்த கதி என்றால்
வெள்ளை மாளிகை நாய் என்றால்
விட்டா விடுவோம்?
வீட்டின் திசையறிய
வீதியெங்கும் மின்கம்பங்களில்
காலைத்தூக்கிப் பழக்கப்பட்டவை நாய்கள்.
ஆனால் அமெரிக்க நாயோ
ஆயுதம் தூக்கிப்பார்க்கிறது.
எல்லா இடத்திலும்
வாய்வைத்து பழக்கப்பட்டவை நாய்கள்.
வியட்நாமில் வாய்வைத்து
வாலை இழந்தது வெள்ளைநாய்.
சுற்றித்திரிந்து களைத்த அந்த நாய்
ஹிரோசிமா, நாகசாகியில் குடித்த
ரத்த தாகம் தீராது
பெட்ரோலிய கிணறுகளை
நோக்கி ஓடியது.
கால்நூற்றாண்டு காலமாய்
காத்துக்கிடந்த நாயால்
கொல்லப்பட்டான் சதாம் உசேன்.
சாவி கொடுத்தால்
பொம்மைகள் பாடும்.
சாவி கொடுத்தால்
பொம்மைகள் பேசும்.
சாவி கொடுத்த பொம்மைகள்
முதன்முதலாக
ஒரு மாமனிதனுக்கு
மரணத்தை வழங்கின.
பாவத்தின் சம்பளம்
மரணம் என்கிறது பைபிள்.
எந்த பக்கத்தில் இருக்கிறது
ஜார்ஜ் புஷ்ஷின்
பாவத்திற்கான சம்பளம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக