வெளிக்கூரையேதுமில்லா
மயானச்சாலையில்
காத்திருக்கிறாள் மாடத்தி.
பூசி மொழுகப்பட்ட
சமாதி திண்டில் சயனம்.
அடிக்கும் மாரி தேகம் நனைக்க
உடைந்த பாடையின்
ஊழித்தீ உயிர் எழுப்பும்.
எலும்பு பொறுக்கும்
நாய்கூட்டம்
வாலாட்டி சினேகம் கொள்ளும்.
எரிதலிடையே எழும் கூக்குரல்
காற்றில் கரைய
வானம் நோக்கி அழும் நரிகள்.
அடிபட்டு பிரேதச்சாலையில்
முகம் தொலைத்த
புருஷனின் முகத்தை
தேடிக்கொண்டிருக்கிறாள்
சுடலைக்கிறுக்கச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக