வை ராசா வை
இது மூணு சீட்டு விளையாட்டு.
ராசாவோடு உள்ளே வச்சுடுவோம்.
இதுவும் மூணு சீட்டு விளையாட்டு.
திருட்டுக் கூட்டத்திற்கு
இருட்டுப் பிடிக்குமென்பதால்
இருட்டாகவே கிடக்கிறது
தமிழ்நாடு.
இரவு நேரங்களில்
தாமதமாக வீடு திரும்பும்
அண்ணனை
தறுதலையெனத் திட்டும்
என் அப்பாவிடம் போய்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்
காணாமல் போன அரசியல்வாதி
திடீரென பிரசன்னமாகி
நான் உங்கள் வீட்டுப்பிள்ளை என்கிறார்.
ஒரு கிலோ கறி வாங்கினால்
4 முட்டை இலவசம்.
ஒரு டஜன் சோப்பு வாங்கினால்
பிளாஸ்டிக் ஜக் இலவசம்.
ஒரு சேலை வாங்கினால்
ஒரு சேலை இலவசம்.
இலவசங்கள் இருக்கும் வரை
ஏழைகள் மட்டுமல்ல
வியாபாரிகளும் இருப்பார்கள்.
எந்த சவர்க்காரத்தாலும்
வெளுக்க முடியவில்லை
ஊழல் அரசியல்வாதிகளை.
அவர்களும் சொல்கிறார்கள்
கறை நல்லதென்று.

1 கருத்து:
அதுக்கு என்ன பண்றது சார் நம்ம மக்கள் அப்படி முட்டாள்களாகவே இருக்குறாங்க 1947ல இருந்து
கண்ணதாசன் சொல்லுவார்
" ஒரு அற்பனை சமாளிப்பதற்கு பெயர் சர்வாதிகாரம்
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்கு பெயர் ஜனநாயகம் "
எல்லாம் நாம ஒரு நாள் பண்ற முட்டாள் தனம் இப்படி அஞ்சஞ்சு வருசமா நம்மள 60 வருசமா ஆட்டிபடைக்குது
கருத்துரையிடுக