புதன், 16 மார்ச், 2011

சோம்பேறித்தனத்தை எப்படி அடித்து விரட்டுவது?

நமது அன்றாடப்பணிகளில் தவறாது நிகழ்பவைகளில் கட்டாயம் உணவு உட்கொள்வதும், தண்ணீர் குடிப்பதும் தவிர்க்க  முடியாத செயலாக உள்ளது. அப்படி என்னுடைய அன்றாட நிகழ்வுகளில் தவிர்க்க முடியாதவைகளில் ஒன்று எழுதுவது. அடுத்து கணினி முன் அமர்வது.
தொழில் சார்ந்த விசயமாக இருந்தாலும் ஆத்மார்த்தமாக இல்லாவிட்டால் இரண்டு விசயங்களிலும் ஈடுபாடு இல்லாவிட்டால் அமர்ந்தால் பிரயோசமில்லாமல் போய்விடும்.
கடந்த சில நாட்களாக  என்னிடம் அப்பிக்கிடக்கும் சோம்பேறித்தனத்தை எப்படி அடித்து விரட்டுவது எனத்தெரியவில்லை. பல கட்டுரைகள், பல கவிதைகள் எழுதி அனுப்பி இணையங்களுக்கும். இதழ்களுக்கும் அனுப்பி வைப்பதில் இந்த சோம்பேறித்தனம் ஏற்படவில்லை. எனது இதனால் பிளாக்கில் அவற்றை பதிவு செய்வதில் தான் இந்த சோம்பேறித்தனம்.
இதற்குக் காரணம் என்னவென்று யோசித்த போது, நமது சொந்த பிளாக் தானே எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்ற நினைப்பு கூட அதற்கு காரணமாக இருக்கலாம். சொந்த வேலைகளைத் தள்ளிப்போட்டு பழக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்த தள்ளிவைப்பு நடந்து கொண்டேயிருக்கிறது.
சரி, இதை எப்படி முறிவுக்குக் கொண்டு வரலாம் என நினைத்த போது, முதலில் இதையே பிளாக்கில் பதிவு செய்து விட்டு அடுத்த நாளில் இருந்து மற்றவற்றை பதிவு செய்யலாம் என்ற எண்ணம் தான் மேலோங்கி வருகிறது. எப்படியோ பிளாக்கில் நீண்ட நாள் கழித்து எனது சோம்பேறித்தனம் குறித்து பதிவு செய்ய முடிந்தது என நினைக்கும் போது அடிக்கடி எனது சோம்பேறித்தனத்தை பகடி செய்தால் தொடர்ந்து பதிவுகள் கிடைக்கலாம் என நினைக்கிறேன்.




கருத்துகள் இல்லை: