சட்டென
இரண்டில்
ஒன்றைத் தொடு என
விரல்களை நீட்டுகிறாய்.
ஏதோ விரல் நுனியில்
மறைந்திருக்கிறது
உனது தவறான முடிவு.
எப்படி அறிந்து கொள்வது
விரல் தொடாமல்
உன் சரியான முடிவை
எப்படியேனும்
பிழைத்து விடலாம்தான்.
தப்பித் தவறி
அப்படியே பிழைத்து விட்டாலும்
சாகாமல்
உயிரோடு ஒட்டிக் கொண்டேயிருக்கிறது
பசி.
உழைக்காதிருந்தால்
பிழைக்க முடியாமல்
செத்துப் போகலாம்
ஜீவனும், பசியும்.
(நட்பூ இணையத்தளம்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக