புதன், 13 ஜனவரி, 2010

ஒரு மழை நாளில். . . .


மழைவரும் முன்
குடை எடுத்து வருபவர்களை
பலநேரங்களில் ஏமாற்றி விடுகிறது
மழை.
இன்று வராது என நினைத்து
குடை எடுத்து வராத நேரத்தில்
இறங்கி வந்து அவர்களை
மீண்டும் ஏமாற்றுகிறது மழை.
கால காலமாக
விவசாயிகளையும்
பல நேரங்களில்
குடை எடுப்பவர்களையும்
ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறது
மழை.
நாள் முழுவதும் கொட்டித் தீர்த்த
ஒரு மழை நாளில்
இது குறித்து தான்
முறையிட்டிருக்குமோ
மழையிடம் தவளைகள்?
(புதன், 16 செப்டம்பர் 2009 கீற்று இணையத்தில் வெளிவந்த கவிதை)

கருத்துகள் இல்லை: